Monday, 22 October 2012

பாரதீஸ்வரி... பாபநாசினி...

பாரதீஸ்வரி... பாபநாசினி
பாரதமெனும் ஞானக்கோயில் ஞானாம்பிகை நீ
பாரதீஸ்வரி... பாபநாசினி

குமரி முனை தவம் செய்யும் பகவதி நீயே
காஷ்மீரப் பனிமலையை காக்கும் வைஷ்ணவி
ஷ்ருங்க பீட சங்கரரின் சாரதை நீயே
காளிகட்ட ராமகிருஷ்ண பவதாரினியே..                (பாரதீஸ்வரி... பாபநாசினி)

நஞ்சை உண்ட கண்டன்தந்த பாகீரதி நீ
கொஞ்சு தமிழ்க் குறுமுனிவன் காவிரியும் நீ
காளிங்க நர்த்தனன் ஸ்ரீ கண்ணன் யமுனை நீ
வேள்வி கண்ட வேதபூமி தந்த சிந்து நீயே              (பாரதீஸ்வரி... பாபநாசினி)

வான்மறை திருக்குறள்தந்த வள்ளுவன் நீயே
வேதம் நான்கு மாபாரத வியாசனும் நீயே
சிலம்பிசைத்த சேரன் தம்பி இளங்கோவும் நீயே
கம்பன் காளிதாசன் கவி பாரதியும் நீயே                 
(பாரதீஸ்வரி... பாபநாசினி)

அருந்ததி அனசூயா சதி திரவ்பதி நீயே
சீதை கண்ணகி அன்னை சாரதாவும் நீயே
'வையத்து வாழ்வீர்காள்' ஆண்டாலும் நீயே
மீராப்பிரபு கிரிதாரி மீராபாயும் நீயே                        
(பாரதீஸ்வரி... பாபநாசினி)

திலகர் வீர சாவர்க்கர் நேதாஜியும் நீயே
வீரன் வாஞ்சி குமரன் பகத்சிம்மனும் நீயே
தாய்நாட்டின் திருத்தொண்டே தேவபூஜை என்று
வாழ்ந்த டாக்டர் ஹெட்கேவார் குருஜியும் நீயே    
(பாரதீஸ்வரி... பாபநாசினி)

அம்மையும் நீ அப்பனும் நீ அன்னபூரணி
அகில லோக நாயகி எமை ஆண்டிடுவாய் நீ
ஜகத் ஜனனி ஜகந் நாயகி சர்வேஸ்வரி நீயே
அகண்ட பாரதம் காண ஆசி அளி தாயே                 
(பாரதீஸ்வரி... பாபநாசினி)

Wednesday, 4 May 2011

மனிதா நீ மகத்தானவன் - மண்ணில் பரம் பொருளின் உருவானவன்

மனிதா நீ மகத்தானவன் - மண்ணில் 
பரம் பொருளின் உருவானவன்
பாரதத் தாய் இளைய மகன்
பண்பாட்டில் மூத்த மகன்
வரலாற்றை உருவாக்கும் தலை மகன் நீ
                                        (மனிதா நீ மகத்தானவன்...)

மனம் வைத்தால் மலைகளும் உன் கைகளுக்குள் தூளாகும்
கனப் பொழுதில் நதிகளுமே திசை மாறிப் பாய்ந்து வரும்  
மனம் வைத்தால் மண்ணிதனில் அம்ருதமும் திரண்டு வரும்
வானம் இங்கு பூமியுடன் விளையாட்டாய் ஒன்றிணையும்
அழிவற்றவன் நீ.....
அழிவற்றவன் நீ - உந்தன் உயிரினிலே நின்றுலவும்
பரம் பொருளின் மகத்துவத்தை உணர்ந்திடுவாயே
                                        (மனிதா நீ மகத்தானவன்...)

கண்களிலே கனலிருக்கும் அசைவினிலே புயலிருக்கும்
பொங்கிவரும் சினம் கண்டு காலனிங்கு ஓடிவிடும்
மண்ணும் செந்நிறமாகும் மாமலையும் தாழ்ந்துவிடும்
சீற்றத்தின் உச்சியிலே தாண்டவம் நடம் புரியும்  
உண்மையிலே நீ....
உண்மையிலே நீ பெரும் சக்திகளின் முழு உரு நீ
குரல் கொடுத்து புது யுகத்தை அழைத்திடுவாயே
                                        (மனிதா நீ மகத்தானவன்...)

அண்டத்தில் வீரமகன் அக்னியைப் போல் பெருந்தீரன்
கட்டளைக்கு அடிபணிந்து காலம் கூட நின்று விடும்
உறுதி கொண்டு உழைத்தாலே சாதிப்பாய் எதையும் நீ
துணிவு கொண்ட உள்ளத்துடன் சிங்கமென எழுவாய் நீ
முயன்றாலே நீ....
முயன்றாலே நீ உந்தன் முயற்சிஎனும் பெரும்பலத்தால்
மண்ணுலகை விண்ணுலகாய் மாற்றிடுவாயே
                                        (மனிதா நீ மகத்தானவன்...)
 

Tuesday, 3 May 2011

தேவலோகமே வியக்கும் எம் அருமைத் தாயகம்தேவலோகமே வியக்கும் எம் அருமைத் தாயகம்
ஆதி அந்தம் அற்றதிந்த அமரபூமி பாரதம்

கிரேக்க ஹூண  யவனர்கள் புயலைப் போலத் தாக்கினர்
பஞ்ச நதிக் கரை தனில் தோல்வி கண்டு சாய்ந்தனர்
பஞ்சு போல் பறந்தனர் காற்றிலே கலந்தனர்
கால வெள்ளப் போக்கிலே கடலுடன் கரைந்தனர்
பாரந்தத்தின் வீர சக்தி பாரிலே ஜொலித்தது
பாரிலே ஜொலித்தது ...
                                           ( தேவலோகமே வியக்கும் )

பாரதத்தின் மண்ணில் எங்கும் சுயநலம் படர்ந்தது
பராக்கிரமம் வளர்த்திடும் மரபுகள் தகர்ந்தன
போக வசதி ஆசையில் மூழ்கி வாழ்ந்த வேளையில்
துரோகிகள் மலிந்தனர் சுதந்திரம் அழிந்தது
தேசபக்த ஜோதியேற்றி புத்துணர் வெழுப்புவோம்
புத்துணர் வெழுப்புவோம் ....
                                           ( தேவலோகமே வியக்கும் )

உணவு உடைகள் ஜாதிகள் வழிபாட்டில் வேற்றுமை
உள்ளத்திலே கோவில் கொண்ட தர்மத்திலே ஒற்றுமை
முந்தையரின் உதிரம் நம்மை ஒரு குடும்பம் ஆக்குது
ஒருமையை உடைக்க வரும் மடமையை அகற்றுவோம்
ஒன்றுபட்ட பாரதத்தின் எழுச்சி கீதமே இது
எழுச்சி கீதமே இது ....
                                           ( தேவலோகமே வியக்கும் )

அதர்ம சக்தி ஓங்கி எங்கும் தலை விரித்து ஆடுது
அன்னியர் வலை விரித்து வேட்டையும் நடக்குது
அன்னை அலறி அழும் குரல் நெஞ்சையே உருக்குது
ராஷ்ட்ர பக்தி நறுமணம் நாட்டிலே நிரப்புவோம்
நாட்டினை எழுப்புவோம் இன்றைய பணி இது
இன்றைய பணி இது ....
                                           ( தேவலோகமே வியக்கும் )Saturday, 30 April 2011

லட்சியமே வடிவெடுத்த உன்னைப் போல உயருவோம்


சுவாமி விவேகானந்தர்


லட்சியமே வடிவெடுத்த 
உன்னைப் போல உயருவோம்
நாட்டுப் பணியில் ஒன்றுவோம்
சரணடைந்தோம் திருவடியில் 
நாட்டுப் பணியில் ஒன்றுவோம்

 
இந்த அரும்பு மெல்ல மலரும்
எழில் மலராய் ஆகிடும்
உன்னைப் போல எங்கெங்கும் 
நறுமணம் பரப்புவோம்
உன்னை போல உயருவோம்
சரணடைந்தோம் திருவடியில் 
நாட்டுப் பணியில் ஒன்றுவோம்

 
இதய தெய்வம் நீயே தான்
பக்தி பொங்கும் சேவை செய்து
உன்னை நினைந்து உரு மாறி
உந்தன் வடிவாய் ஆகுவோம்
உன்னை போல உயருவோம்
சரணடைந்தோம் திருவடியில் 
நாட்டுப் பணியில் ஒன்றுவோம்

மலர்கள் தூவி வழிபடவே
உன் சந்நிதி வரவில்லை
சுயநலத்தை ஹோமமாக்கி
வேள்வித் தீயில் அர்ப்பணம்
உன்னை போல உயருவோம்
சரணடைந்தோம் திருவடியில் 
நாட்டுப் பணியில் ஒன்றுவோம்

 
உன்னைப் போல பணி செய்வோம்
ஓங்கி வளரும் உன் பணி
தேசம் தர்மம் பண்பாட்டை
காக்கும் அரண் ஆகுவோம்
உன்னை போல உயருவோம்
சரணடைந்தோம் திருவடியில் 
நாட்டுப் பணியில் ஒன்றுவோம்

பாரதத் தாயைப் பணிந்து வணங்கும் வீர மைந்தர் நாம்


பாரதத் தாயைப் பணிந்து வணங்கும்
வீர மைந்தர் நாம்
அர்ப்பணம் ஆவோம் அவள் தாளினிலே
தூய மலர்கள் நாம்


பேசுகிறோம் நாம் பல மொழி - ஆனால்
பேதம் இங்கில்லை
வங்கள மொழியும் இன்பத் தமிழும்
எங்கள தென்றிடுவோம்
கவின் மலையாளம் கன்னடம் தெலுங்கு
ஹிந்தியும் எங்களதே
                                 (பாரதத் தாயை....)
                                
குமரி முனையிலே தவம் செய் சக்தி
இமயம் உறை
ஈசன்
ராமேஸ்வரமும் காசியும் அதனை
வழிபடு பக்தர்களும்
நர்மதை கங்கை காவிரி நதியும்
ஒருமை உணர்த்திடுது
                                    (பாரதத் தாயை...)

தொழில் செய்தாலும் கல்வி கற்றாலும்
தேசத்தின் நன்மைக்கே
நாட்டின் உடைமையை நாமே அழித்தால்
நஷ்டம் யாருக்கு
செய் தொழிலினிலே வேறு பட்டாலும்
யாதும் அவள் தொழிலாம்
                                  (பாரதத் தாயை...)

ஆயிரம் ஜாதிகள் நம்மில் உண்டு
ஆனால் நாம் ஒன்று
மாநிலம் பலவாய் பிரிந்திருந்தாலும்
மக்கள் நாம் ஒன்று
வழிபடி தெய்வம் பலவானாலும்

அனைவருமே ஒன்று
                                 (பாரதத் தாயை...)