Saturday, 30 April 2011

பாரதத் தாயைப் பணிந்து வணங்கும் வீர மைந்தர் நாம்


பாரதத் தாயைப் பணிந்து வணங்கும்
வீர மைந்தர் நாம்
அர்ப்பணம் ஆவோம் அவள் தாளினிலே
தூய மலர்கள் நாம்


பேசுகிறோம் நாம் பல மொழி - ஆனால்
பேதம் இங்கில்லை
வங்கள மொழியும் இன்பத் தமிழும்
எங்கள தென்றிடுவோம்
கவின் மலையாளம் கன்னடம் தெலுங்கு
ஹிந்தியும் எங்களதே
                                 (பாரதத் தாயை....)
                                
குமரி முனையிலே தவம் செய் சக்தி
இமயம் உறை
ஈசன்
ராமேஸ்வரமும் காசியும் அதனை
வழிபடு பக்தர்களும்
நர்மதை கங்கை காவிரி நதியும்
ஒருமை உணர்த்திடுது
                                    (பாரதத் தாயை...)

தொழில் செய்தாலும் கல்வி கற்றாலும்
தேசத்தின் நன்மைக்கே
நாட்டின் உடைமையை நாமே அழித்தால்
நஷ்டம் யாருக்கு
செய் தொழிலினிலே வேறு பட்டாலும்
யாதும் அவள் தொழிலாம்
                                  (பாரதத் தாயை...)

ஆயிரம் ஜாதிகள் நம்மில் உண்டு
ஆனால் நாம் ஒன்று
மாநிலம் பலவாய் பிரிந்திருந்தாலும்
மக்கள் நாம் ஒன்று
வழிபடி தெய்வம் பலவானாலும்

அனைவருமே ஒன்று
                                 (பாரதத் தாயை...)




No comments:

Post a Comment