Wednesday, 4 May 2011

மனிதா நீ மகத்தானவன் - மண்ணில் பரம் பொருளின் உருவானவன்

மனிதா நீ மகத்தானவன் - மண்ணில் 
பரம் பொருளின் உருவானவன்
பாரதத் தாய் இளைய மகன்
பண்பாட்டில் மூத்த மகன்
வரலாற்றை உருவாக்கும் தலை மகன் நீ
                                        (மனிதா நீ மகத்தானவன்...)

மனம் வைத்தால் மலைகளும் உன் கைகளுக்குள் தூளாகும்
கனப் பொழுதில் நதிகளுமே திசை மாறிப் பாய்ந்து வரும்  
மனம் வைத்தால் மண்ணிதனில் அம்ருதமும் திரண்டு வரும்
வானம் இங்கு பூமியுடன் விளையாட்டாய் ஒன்றிணையும்
அழிவற்றவன் நீ.....
அழிவற்றவன் நீ - உந்தன் உயிரினிலே நின்றுலவும்
பரம் பொருளின் மகத்துவத்தை உணர்ந்திடுவாயே
                                        (மனிதா நீ மகத்தானவன்...)

கண்களிலே கனலிருக்கும் அசைவினிலே புயலிருக்கும்
பொங்கிவரும் சினம் கண்டு காலனிங்கு ஓடிவிடும்
மண்ணும் செந்நிறமாகும் மாமலையும் தாழ்ந்துவிடும்
சீற்றத்தின் உச்சியிலே தாண்டவம் நடம் புரியும்  
உண்மையிலே நீ....
உண்மையிலே நீ பெரும் சக்திகளின் முழு உரு நீ
குரல் கொடுத்து புது யுகத்தை அழைத்திடுவாயே
                                        (மனிதா நீ மகத்தானவன்...)

அண்டத்தில் வீரமகன் அக்னியைப் போல் பெருந்தீரன்
கட்டளைக்கு அடிபணிந்து காலம் கூட நின்று விடும்
உறுதி கொண்டு உழைத்தாலே சாதிப்பாய் எதையும் நீ
துணிவு கொண்ட உள்ளத்துடன் சிங்கமென எழுவாய் நீ
முயன்றாலே நீ....
முயன்றாலே நீ உந்தன் முயற்சிஎனும் பெரும்பலத்தால்
மண்ணுலகை விண்ணுலகாய் மாற்றிடுவாயே
                                        (மனிதா நீ மகத்தானவன்...)
 

No comments:

Post a Comment