Tuesday, 3 May 2011

தேவலோகமே வியக்கும் எம் அருமைத் தாயகம்



தேவலோகமே வியக்கும் எம் அருமைத் தாயகம்
ஆதி அந்தம் அற்றதிந்த அமரபூமி பாரதம்

கிரேக்க ஹூண  யவனர்கள் புயலைப் போலத் தாக்கினர்
பஞ்ச நதிக் கரை தனில் தோல்வி கண்டு சாய்ந்தனர்
பஞ்சு போல் பறந்தனர் காற்றிலே கலந்தனர்
கால வெள்ளப் போக்கிலே கடலுடன் கரைந்தனர்
பாரந்தத்தின் வீர சக்தி பாரிலே ஜொலித்தது
பாரிலே ஜொலித்தது ...
                                           ( தேவலோகமே வியக்கும் )

பாரதத்தின் மண்ணில் எங்கும் சுயநலம் படர்ந்தது
பராக்கிரமம் வளர்த்திடும் மரபுகள் தகர்ந்தன
போக வசதி ஆசையில் மூழ்கி வாழ்ந்த வேளையில்
துரோகிகள் மலிந்தனர் சுதந்திரம் அழிந்தது
தேசபக்த ஜோதியேற்றி புத்துணர் வெழுப்புவோம்
புத்துணர் வெழுப்புவோம் ....
                                           ( தேவலோகமே வியக்கும் )

உணவு உடைகள் ஜாதிகள் வழிபாட்டில் வேற்றுமை
உள்ளத்திலே கோவில் கொண்ட தர்மத்திலே ஒற்றுமை
முந்தையரின் உதிரம் நம்மை ஒரு குடும்பம் ஆக்குது
ஒருமையை உடைக்க வரும் மடமையை அகற்றுவோம்
ஒன்றுபட்ட பாரதத்தின் எழுச்சி கீதமே இது
எழுச்சி கீதமே இது ....
                                           ( தேவலோகமே வியக்கும் )

அதர்ம சக்தி ஓங்கி எங்கும் தலை விரித்து ஆடுது
அன்னியர் வலை விரித்து வேட்டையும் நடக்குது
அன்னை அலறி அழும் குரல் நெஞ்சையே உருக்குது
ராஷ்ட்ர பக்தி நறுமணம் நாட்டிலே நிரப்புவோம்
நாட்டினை எழுப்புவோம் இன்றைய பணி இது
இன்றைய பணி இது ....
                                           ( தேவலோகமே வியக்கும் )



No comments:

Post a Comment